வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு 30 பேர் தேர்வான நிலையில், அதில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நசீர் அஹமது, அஹமது முகைதீன், பிலால் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.
இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த S. நசீர் அஹமது மூன்றாம் இடம் பிடித்து சாதித்தார். அவருக்கு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியில் வைத்து பாராட்டு சான்றிதழும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.



