அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதலிடம் பிடித்து 2 கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றார். மேலும் ஆஷிகாவை பாராட்டி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பித்தார்.
இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரமலான் பிறை 1 முதல் 15வரை சஹர் நேரத்தில் போட்டிக்கான கேள்விகள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கேற்றது தனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , நேரத்தை நல்வழியில் செலவு செய்யும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் போட்டியிலும் அனைவரும் கலந்து கொண்டு புனிதமான ரமலானை நல்வழியில் செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் கிருபை செய்வானாக எனவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்.