பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்த வரவழைக்கப்பட்ட 360மீட்டர் நீளம் உள்ள புதிய தண்டவாளங்களை இறக்கும் பணி இன்று பட்டுக்கோட்டையில் இருந்து பள்ளிக்கொண்டான் வரை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் ரயில் மேடை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை இடையே 126 சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, 10 பெரிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு ரயில் பதையுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது.