Tuesday, March 10, 2026

ஆந்திர மாநிலம் கடப்பா ஏரியில் 7 சடலங்கள் மிதந்ததால் பரபரப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ஒண்டிமெட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 சடலங்கள் மிதப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடப்பாவில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உதவியுடன் ஒண்டிமெட்டா போலீசார் சடலங்களை மீட்டனர்.

சடலத்தின் அருகே உணவுப்பொருட்கள் மற்றும் உடைகள் அடங்கிய பைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஏதேனும் உடல்கள் உள்ளதா என தேடுதல் நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், நேற்றிரவு ஏரிப்பகுதியில் செம்மரம் வெட்ட சிலர் வந்ததாகவும் அவர்களை போலீசார் விரட்டி சென்றபோது தப்பிக்க முயன்று ஏரியில் குதித்து உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே இவர்கள் 7 பேரும் ஆந்திர வனத்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டு, கொலையை மறைப்பதற்காக ஏரியில் உடல்கள் வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img