Monday, February 2, 2026

காணமல் போன மீனவர்களின் உடல் கரை ஒதுங்கியது!!

spot_imgspot_imgspot_imgspot_img
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த (02-08-2019) வெள்ளிக்கிழமை புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர்.

பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர் நாட்டுப்படகை வாங்கிய மறுநாளே புதிய படகின் மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது பகல் 12 மணியளவில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 11 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து உயிருக்குப் போராடினர். செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்தனர். மற்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் தற்போது அவர்களின் உடல்களும் இன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனையடுத்து தமுமுக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தஞ்சை தமுமுக தெற்கு மாவட்ட தொன்டரணி செயலாளர் அதிரை கனியுடன் தமுமுகவினர்  மற்றும் கடலோர காவல் படையினரும் விரைந்து சென்று உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

 தகவல் : தமுமுக ஊடகப்பிரிவு தஞ்சை தெற்கு
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img