Thursday, December 18, 2025

பேராவூரணி அருகே சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி ஊராட்சியில்  சேதமடைந்த மண்சாலையை சீரமைத்து தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி ஊராட்சியில் செங்கமங்கலம் செல்லும் வழியில் பிரிவு மண்சாலை உள்ளது.  பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் பாதையில்,  சுமார் 10 அடிக்கு சேதமடைந்த நிலையில் போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. விவசாயிகள் வயல்களுக்கு இடு பொருள்கள் கொண்டு செல்வதும், விளைவித்த பொருள்களை கொண்டு வருவதும் இந்த பாதையின் வழி யாகத்தான்.  தற்போது கோடை விவசாயம் செய்து உள்ளனர். அறுவடை காலமாக உள்ளதால், அறுவடை இயந்திரங்க ளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பலவாறு சிரமப்படுகின்றனர்.

எனவே உடனடியாக இந்த மண்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்த சன்னாசி கூறுகையில், “மாவடுகுறிச்சியில் இருந்து செங்கமங்கலம் செல்லும் சாலையில்  விவசாய நிலங்களுக்கு செல்லும்  பழையநகரம்  மண்சாலையில்  மிகப்பெரிய பள்ளம் உள்ளது.  இந்த  பாதையின் வழியாக விவசாயிகள் சென்று வந்து கொண்டிருந்தனர். தற்போது  மண் சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால் நெல் வயல்களில் அறுவடை செய்து கொண்டு வரமுடியாமல் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து,மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்,  ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய ஆணையர், ஒன்றிய குழு உறுப்பினருக்கு மனு கொடுத்து உள்ளோம். உடனடியாக   நடவடிக்கையும் எடுத்து   மண்பாதையை  சீரமைத்து தர  வேண்டும்” என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img