Tuesday, February 3, 2026

மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல்(படங்கள்)!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியல்.

ஓகி புயல் அச்சம் நீங்கிய பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஓகி புயல் காரணமாக காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை உடனடியாக அரசு போர்கால அடிப்படையில் மீட்காததை கண்டித்தும் இன்று(9.12.2017) தஞ்சை மாவட்ட மீனவர்கள்  சாலை மறியல் செய்தனர்.

இதனையறிந்து வந்த காவல் துறை அதிகாரிகள் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும் என்று கூறியதால் மீன்வர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.மறியல் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படுகிறது.

இதற்கிடையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சம்பவ இடத்திற்கு வந்து மீனவ பிரதிநிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மறியல் போராட்டத்தில் சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க பொருளாளர் அ.இப்றாகிம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img