Wednesday, March 18, 2026

அநியாய வரியை ரத்து செய்! அதிராம்பட்டினம் தாலுகாவை உருவாக்கிடு!! அதிகாரிகளுக்கு பறந்த மனுக்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சியில் பல இடங்களில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதிகள் இல்லை. இத்தகைய சூழலில் 50% முதல் 150% வரி உயர்வுக்கு தலைவர் MMS. தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் தலைமையிலான நகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை திமுக கவுன்சிலர் ஆய்ஷா சித்திக்கா S.H.அஸ்லம், முஸ்லீம் லீக் கவுன்சிலர் பௌஜில் முபீன், SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் சசிகுமாரை நேரில் சந்தித்த அதிரை நகர தலைவர் அஸ்லம் தலைமையிலான நிர்வாகிகள், அதிரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டினர். மேலும் வரி விதிப்புக்கான A,B,C மண்டலங்களை மறுபரிசீலனை செய்வதுடன் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அதிரை நகர  SDPI நிர்வாகிகள், அதிராம்பட்டினத்தை தாலுகாவாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img