Friday, May 10, 2024

அதிரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்! விரைவில் சுற்றுலாத்தலமாகிறது!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரையும், கடலுக்கு செல்லக்கூடிய பாதையும் முழுவதும் புதர்கள், கருவேல மரங்கள் வளர்ந்து பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதனை தூய்மைப்படுத்தி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவுமாறு கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் கைஃபா அமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் பலநாள் கோரிக்கையை ஏற்று, அதிராம்பட்டினம் கடற்கரையையும், ரயில்வே கேட்டிலிருந்து கடலுக்கு செல்லக்கூடிய பாதையையும் தூய்மைப்படுத்தி, அதிராம்பட்டினம் கடற்கரையை பொதுமக்களின் பொழுதுபோக்கு தலமாக மாற்றும் நோக்கில் கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா), கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் ஒத்துழைப்புடன் பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்ச ரூபாய் செலவில் 7 நாட்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு டீசல் மற்றும் சாப்பாடு என ரூ. 10,000 செலவாகிறது. இதில் இன்றைய முதல் நாள் செலவை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் ஏற்றுள்ளது. மேலும் இதற்காக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகம், கிரசன்ட் பிளட் டோனர்ஸ்(CBD), லயன்ஸ் கிளப் நிர்வாகி பரவாக்கோட்டை T.P.K. ராஜேந்திரன் ஆகியோர் தலா ஒரு நாளைக்கு ஆகும் செலவுகளை ஏற்றுள்ளனர்.

அதிரை கடற்கரை சாலை ரயில்வே கேட் அருகே இன்று காலை நடைபெற்ற தொடக்க நிகழ்வில், கைஃபா அமைப்பின் செயலாளர் பிரபாகரன், நகரமன்ற தலைவர் MMS. தாஹிரா அப்துல் கரீம், துணைத் தலைவர் இராம. குணசேகரன், லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பரவாக்கோட்டை T.P.K. ராஜேந்திரன், அதிரை லயன்ஸ் சங்க தலைவர் குப்பாஷா அஹமது கபீர், செயலாளர் ஹாஜா நஸ்ருதீன், CBD அமைப்பின் மாவட்ட தலைவர் பேரா. செய்யது அஹமது கபீர், ஏரிப்புறக்கரை ஊராட்சிமன்ற தலைவர் சக்தி, 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் PGT. செய்யது முஹம்மது, அதிரை SDPI கட்சியினர், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர், ஆசாத் நகர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு பொருளாதார உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு :

அதிரை கைஃபா
+91 9345475760
+91 7871205661
+91 9361160581

இங்ஙனம்,
கைஃபா & தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம், கடற்கரைத்தெரு

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...