Friday, May 3, 2024

வெளிநாட்டு செய்திகள்

Big breaking: அமெரிக்காவில் அதிரையர்கள் அதிகம் பயணிக்கும் ரயிலில் மர்மநபர் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் 36வது தெரு ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், புகை குண்டுகளை வீசி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி...

அமெரிக்காவில் துவங்கியது ரமலான்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ நகரத்தில் ரமலான் மாத முதல் பிறை தென்பட்டதாக வந்த ஆதாரப்பூர்வ தகவலை அடுத்து, கலிபோர்னியாவில் சனிக் கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகியது. பேர்பீல்ட் மஸ்ஜித் அல்...

தமிழகத்தில் ரூ. 3,500 கோடியில் முதலீடு செய்கிறது லுலு நிறுவனம்!

4 நாட்கள் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை...

ஹிஜாப் சர்ச்சை : இந்தியா உணவகத்திற்கு சீல் வைத்த பஹ்ரைன் அரசு!

பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்து பெண்ணிற்கு இந்திய உணவகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, உணவகத்தை மூட அந்நாடு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பாக பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் (பிடிஇஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள லான்டர்ன்ஸ் உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும் என பிடிஇஏ கேட்டுக் கொண்டுள்ளது. “மக்களை குறிப்பாக அவர்களின் தேசிய அடையாளத்தை வைத்து பாகுபாடு காட்டும் அனைத்து செயல்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என ஆணையம் தெரிவித்துள்ளது.சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் தொடர்பான 1986 ஆம் ஆண்டின் ஆணைச் சட்ட எண் 15 இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக ஆணையம் மேலும் கூறியது.இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ள லான்டர்ன்ஸ் உணவகம், பெண்ணிற்கு அனுமதி மறுத்த மேலாளர் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக கூறியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக அழகான பஹ்ரைன் நாட்டில், நாங்கள் அனைத்து நாட்டினருக்கும் சேவை வழங்கி வருகிறோம் என்பதை அறிய  லான்டர்ன்ஸ் அனைவரையும் வரவேற்கிறோம்.” என இன்ஸ்டாகிராமில் அந்த உணவகம் பதிவிட்டுள்ளது.மேலும், ஒரு நல்லெண்ண செயலாக மார்ச் 29 தேதி பஹ்ரைன் குடிமக்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என லான்டர்ன்ஸ் உணவகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அமீரக நிகழ்ச்சியில் மல்லிப்பட்டிணம் வாசிகள் பங்கேற்பு..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக நான்கு நாட்கள் பயணமாக அமீரகம் சென்றுள்ளார்.துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு அரங்கை திறந்துவைத்தார். இதற்கு பிறகு அமீரகத்தில் இருக்க கூடிய தமிழர்களை நம்மில் ஒருவர் நம்ம...

Popular

Subscribe

spot_img