செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் இடைவிடாத மழை – ரயில் நிலையத்தில் சிக்கிய மக்கள் !
கடந்த சில நாட்களாக உக்கிர வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை வருமா? என ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
சரியாக இரவு 10மணிக்கு ஆரம்பமான மழை, தற்போது வரை நீடிக்கிறது. இன்று அதிரைக்கு வந்த வேளாங்கண்ணி-...
சாலை வடிகால் வசதியின்றி அவதிப்படும் அம்பேத்கர் நகர் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா அதிரை...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் (இரண்டாவது வார்டு) மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாத போதே அவ்வப்போது பேரூராட்ச்சியால் எங்களின் பகுதி கவனிக்கப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகத்தால்...
பாஜக கருப்பு முருகானந்தத்தின் சொத்துக்களை முடக்க தயாரா? அமலாக்கத்துறைக்கு அபூபக்கர் சித்திக் சவால்!!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுபேசிய அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா அலாவுதீன், தங்களை காக்க யாரும் வர போவதில்லை, தாங்களே வீதிக்கு வந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கூறுவதாக தெரிவித்தார். மேலும் வங்கி கணக்குகளை முடக்கினாலும் பாப்புலர் ஃப்ரண்ட் பணியை முடக்கிவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியாவிலேயே ராணுவம், ரயில்வேக்கு அடுத்து அதிக நிலங்களை கொண்ட அமைப்பு வக்ப் வாரியம் என்றார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அடித்தால் திருப்பிஅடி என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தது பாப்புலர் ஃப்ரண்ட் என சுட்டிக் காட்டிய அவர், பாஜக-வின் கருப்பு முருகானந்தம் வைத்திருக்கும் கோடி கோடியான கருப்பு பணத்தை அமலாக்கத்துறை சோதனையிட தயாரா? என அந்த துறைக்கு சவால்விடுத்தார்.
அதிரை ஸ்ரீகமல விநாயகர் கோவில் குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-
அதிராம்பட்டினம் ஸ்ரீ கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வெள்ளை பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயம் கடந்த...






