Home » உஷார்.. அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை முடங்கும் ..!

உஷார்.. அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை முடங்கும் ..!

0 comment

சர்வதேச அளவில் இணையதளச் சேவைகள் வழங்கி வரும் முக்கியச் சர்வவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு முக்கியப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஆங்காங்கே இணையதளச் சேவை துண்டிப்பு ஏற்படுமாம்.

ரஷ்யா:-

இது குறித்து இன்று(12/10/2018) அறிக்கை வெளியிட்ட ரஷ்யா சர்வதேச இணையதளப் பயனர்களின் நெட்வொர்க்குகள் இணையதளச் சேவை துண்டிப்புப் பாதிப்பில் சிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் இது சில நிமிடங்கள் அல்லது மணி நேரங்கள்லுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயன்:-

இணையதளச் சேவை முக்கியமாகத் தேவைப்படும் Domain Name System எனப்படும் DNS அல்லது முகவரி புத்தகத்தில் கூடுதலாகப் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்து சைபர் வலைத்தள மோசடி நடவடிக்கைகளைக் குறைப்பதற்காக இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகவும், இதனால் சர்வதேச அளவில் இணையதளச் சேவை பாதிப்பு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

இணையதளச் சேவை வழங்குநர்கள்:-

எந்த இணையதளச் சேவை வழங்குநர்கள் எல்லாம் இன்னும் இந்தப் பராமரிப்பு பணிகளுக்காகத் தயாராகாமல் உள்ளார்களோ அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இந்த இணையதளச் சேவை துண்டிப்பினால் பாதிப்பு இருக்குமாம்.

என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இந்தப் பராமரிப்பு பணிகளின் போது சில இணையதளங்கள் அல்லது பரிவர்த்தனைகள் போன்றவற்றை 48 மணி நேரங்களுக்குச் செய்ய முடியாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.

இவர்களுக்கும் பதிப்பு இருக்கும் !

மேலும் புதுப்பிக்கப்படாத ISP வைத்துள்ள பயனர்கள் சர்வதேச அளவில் இந்த இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆண்லைன் வணிகங்கள்:-

இந்த இணையதள ஷட்டவுன் மூலம் ஆன்லைன் வணிகச் சேவைகள் பெறும் அளவில் இல்லை என்றாலும் சிறு அளவில் பாதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter