Home » அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம்….!

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம்….!

by admin
0 comment

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 60 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/10/2018 அன்று நேஷனல் பார்க் ( வாட்டர் டேங்க் ) பாத்ஹா பார்க்கில் இனிதே நடைபெற்றது.

கிராஅத்  ஓதி சாகீர் ( துணை செயலாளர் ) துவக்கி வைத்தார்.முன்னிலை S.சரபுதீன் ( தலைவர் ) வகித்தார்.,அபூபக்கர் ( பொருளாளர் ) வரவேற்புரையாற்றினார். A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )சிறப்புரையாற்றினார், நன்றியுரையாற்றினார் மஹ்மூது ( உறுப்பினர் )

தீர்மானங்கள்:
1) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையால் இந்த அமர்வு ABM – ன் 60 வது கூட்டம் குடும்பம் நிகழ்வாக இனிதே சிறப்பாக நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட அதிரையை சார்ந்த பல தெரு வாசிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்து, இது போன்று அனைத்து கூட்டங்களிலும் கலந்து முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) இன்ஷா அல்லாஹ் வரும் வருடம் 2019 க்கான நமதூர் ஏழை எளியோர்களின் பென்ஷன் விஷயமாக முழு விளக்கம் அளித்து நமதூர் வாசிகள் அதிகமானோர் இந்த பெரும் உதவிதிட்டத்திற்கு பெயர்களை பதிவு செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் புதிய பெயர் கடந்த மூன்று வருடத்தை காட்டிலும் இந்த வருடம் தன்னார்வமாக பெயர்களை பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி செலுத்தப்பட்டது. அத்துடன் மேலும் சேர விருப்பமுள்ள நண்பர்கள் சகோதரர் ஷேக் மன்சூர் அல்லது சகோதரர் அப்துல் மாலிக் இவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

3) மாதாந்திர சந்தாவின் கடந்த கால குறைவான வசூல் நிலைமையை எடுத்துரைத்து வரும் கூட்டங்களில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாத நபர்கள் அந்தந்த மாதத்தின் சந்தா தொகையை தவறாமல் பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த தொகையை கொண்டு பல ஏழை எளியமக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக அமைகிறது என்பதை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

4) இஹ்லாஸான முறையில் 26 வருடமாக செம்மையாக நடத்திவரும் ABM தலைமையகத்தின் செயல்பாடுகளுக்கும் மேலும் ஊர் நலன் கருதி பல சேவைகளை செய்து வரும் ABM-க்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குமாறு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது போன்று ABM – ன் பல திட்டங்களான தையல் பயிற்சி, மையத்து குளிப்பாட்டும் மேஜை மற்றும் கபுர்ஸ்தானத்திற்கான மரங்கள் விஷயத்தில் லாபமின்றி சேவைகளை நமதூர் ஏழை எளிய மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் செயல் படுத்தி வரும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல நல்லதிட்டங்களையும் பைத்துல்மாலின் மூலம் தேவையுள்ள அதிரைவாசிகளின் அனைவரும் எந்த வித தயக்கமின்றி ABM-ஐ அணுகி முறையாக பயன் அடைந்து கொள்ளுமாறு இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

5) இதுவரை நடந்த 60 கூட்டத்திற்க்கு பொருளாதார உதவி செய்த பெரும் உள்ளங்கள் அனைவர்களுக்கும் நன்றி செலுத்தப்பட்டு துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் NOVEMBER 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.


.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter