89
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக அங்கு பணிபுரியும் பணியாளர்களை கொண்டு அதிரை முழுவதும் உள்ள வீடுகளில் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே அதிரை பேரூராட்சியில் இருந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் வீடுகளில் பரிசோதனை செய்ய அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அதிரை பேரூராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது மற்றும் அவர்கள் அனைவர்க்கும் பேரூராட்சி சார்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : ஆய்வுக்கு வரும் பணியாளர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே வீட்டிற்குள் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.