அதிராம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டவர் கம்ப்யூட்டர்புகாரி, படைப்பாற்றல் மிக்க துடிப்பு மிக்க. இளைஞரான இவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பல விருதுகளை பெற்றுள்ளார்.
தொழில் நிமித்தம் மலேசியா சென்ற அவர் அங்கும் தனது கலைப்பணியில் தொடர்ந்து பயணித்து வந்தார்.
இதனிடையே மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக “வருங்கால தூண்கள்” என்ற நூலை இயற்றி மலேசிய மந்திரிகள்,செல்வந்தர்கள் உதவியுடன் வெளியீடு செய்தார்.
அவரின் இந்நூல் தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மலேசிய அரசின் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே புதிய மேடை நாடகம் ஒன்றை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வருகிற 28,29ஆகிய இரண்டு தினங்கள் நடைப்பெற உள்ளது.
மலேசியாவின் முன்னனி தொழில் நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் தங்களின் ஒத்துழைப்பை நல்கியுள்ளது.
இந்நிகழ்வில் மலேசிய முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு ரசிக்க உள்ளனர்.
எனவே வாய்ப்புள்ள தமிழ் பேசும் நல்லுல்ங்கள் இந்நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும்.