Home » கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)

கஜா புயலின் கோர தாண்டவத்தில் சிக்குண்ட அதிரை!! (முதல் கட்ட தகவல்)

by admin
0 comment

வங்கக்கடலில் மையம் கொண்ட கஜா எனும் புயல் நேற்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அதி தீவிர புயலாக நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வந்தது.

இந்நிலையில் இந்த கஜா புயலில் கோர தாண்டவத்தால் அதிரை நகரமும் சிக்குண்டது.

நேற்றிரவு இப்புயல் கரையை கடக்கும் பொழுது அதிரையில் காற்று மணிக்கு சுமார் 111 கிமீ வேகம் வீசியது. இதுவே தமிழகத்தில் கஜா புயலின் அதிவேக காற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கஜா புயலின் தாண்டவத்தில் அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சியில் திராவிடமனி என்கிற மூன்று வயது குழந்தை சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக பலியானது.

மேலும் இந்த புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை CBD அமைப்பு போதிய உதவிகளையும், புயலில் சிக்கியவர்களை மீட்டும் வருகிறது.

இந்த கஜா புயலின் அதி தீவிர காற்றால் அதிரையில் ஆங்காங்கே மரங்கள் சாலையோரம் நடுவே விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்துடிப்புடன்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter