அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 64வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/02/2019 அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் நெய்னா முகம்மது கிராஅத் ஓதினார். அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் P. இமாம்கான் சிறப்புரை ஆற்றினார். செயலாளர் A.M. அஹமது ஜலீல் அறிக்கை வாசித்தார்.
தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் இப்தார் நிகழ்ச்சி அதிரையர்களின் ஒன்று கூடல் குடும்ப நிகழ்வாக வரும் மே மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ( ரமலான் பிறை 5) பத்தாவிலுள்ள CLASSIC RESTAURANT-ல் நடத்துவதென அனைவர்களின் ஒப்புதலின் பேரில் நடத்துவதென இக்கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2) கடந்த நவம்பரில் ஏற்பட்ட காஜா புயலின் நீண்ட கால நிவாரணமான பாதிக்கப்பட்ட ஏழை வீடுகளை சீரமைக்கும் பொருட்டு நிறுவப்பட்ட AGRA என்ற அமைப்பில் தொடக்கத்திலிருந்து முழு தீவிரமாக பணியாற்றி அதற்கான உறுதுணையாக செயல்பட்ட சகோ.இமாம்கானின் சேவையை பாராட்டியும் நன்றியும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் AGRA அமைப்பிற்கான பொருளாதார உதவியை செய்து வரும் நம் உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் மேலும் பொருள்கள் மற்றும் பண உதவி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3) மேலத்தெருவை சேர்ந்த ABMR -ன் உறுப்பினர் சகோ நெய்னா முகமதுவின் தகப்பனார் கடந்த மாதம் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்) இக்கூட்டத்தில் முழு அனுதாபமும் இறங்களும் தெரிவித்ததோடு அவர்களின் மறுமை வாழ்விற்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
4) அதிரையிலுள்ள ஏழைகளின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இம்மாதம் மேலும் 6 தையல் மோட்டார் பொருந்திய மிஷின்கள்+ ஸ்டூல் வசதியுடன் பைத்துல்மாலின் மூலம் வழங்கப்பட்டது. இதற்காக நிதி உதவிய சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MARCH 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இறுதியாக இணைத் தலைவர் A. சாதிக் அகமது நன்றியுரை கூறினார்.