Home » கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை TUJ சங்க தலைவர் தோழர் டி.எஸ்.ஆர் சுபாஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்!!

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை TUJ சங்க தலைவர் தோழர் டி.எஸ்.ஆர் சுபாஷ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்!!

0 comment

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் 6 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது பெண் குழந்தையின் பெற்றோரை கோவைக்கு வருகை தந்த தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் குழந்தைகளை பெற்றோர்கள் மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டது முதல் என் மனம் மிகவும் வேதனை அடைந்தேன் என்று கூறினார்.

அப்போது அவருடன் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ராஜ், கனகராஜ், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தற்போது சந்தோஷ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். அதே சமயம் அப்பகுதி சேர்ந்த அய்யமாள் என்ற மூதாட்டி இறந்த கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துக்கின்றது. பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் துணையிருக்கும் என உறுதியளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணையாக இருந்து வரும் பகுதி மக்களுக்கும், இரவு பகலாக அங்கு பாதுகாப்பில் இருக்கும் காவல்துறையினருக்கும், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க துடிக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தோழர் சுபாஷ் நன்றி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter