149
அதிரை ஆலடி கிரிக்கெட் கிளப் நடத்திய 2ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த மூன்று நாட்களாக அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை ஆலடி கிரிக்கெட் கிளப் அணியினரும் கருங்குளம் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய ஆலடி கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது.
இதில் முதல் பரிசு ரூ. 5,000 ஐ ஆலடி கிரிக்கெட் கிளப் அணியும், இரண்டாம் பரிசு ரூ. 3,000 ஐ கருங்குளம் நண்பர்கள் கிரிக்கெட் அணியும், மூன்றாம் பரிசு ரூ. 2,000 ஐ நோ ஃபியர் காய்ஸ் முத்துப்பேட்டை அணியும், நான்காம் பரிசு ரூ. 2,000 ஐ ஆலடி கிரிக்கெட் கிளப் அணியும் தட்டிச் சென்றன.