81
சென்னையில் சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது அன்றாட தேவைக்கே அல்லல்பட்ட பலரும் சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊர்களில் தஞ்சம் அடைந்தனர் இதில் அதிரையர்களும் அடங்குவர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காலையில் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.