Friday, April 26, 2024

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு… தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் !

Share post:

Date:

- Advertisement -

அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்து இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த வழக்கு மிகவும் முக்கியமானது என்பதால் நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளதால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பாதுகாப்பை அதிகரிக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

தமிழகத்தில் கோவில்கள், மசூதிகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ், துணை காவல் படையினர் எல்லோரும் பாதுகாப்பு பணியில் இறங்கி உள்ளனர்.

விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...