Home » NPR பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஸ்லாமிய பண்டிகைகள் !

NPR பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஸ்லாமிய பண்டிகைகள் !

0 comment

பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என கண்டித்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்துக்கும் மக்களும் , எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் என்.சி.ஆரை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக உள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) கொண்டு வரப்படும் என அறிவிப்பட்டு அதற்கான கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அந்த கையேட்டில் க்ரீகோரியன் / ஆங்கில மாதங்களுடன் தொடர்புடைய பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் கொண்ட தொகுப்பு மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்னவெனில், அந்த கையேட்டில் உள்ள விடுமுறை, பண்டிகை நாட்கள் அடங்கிய பட்டியலில் இஸ்லாமியர்களின் பண்டிகைகளான ரமலான், மிலாடி நபி, பக்ரீத், மொகரம் உள்ளிட்டவை புறக்கணிக்கப்பட்டு இந்து, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த மதத்தினர் கொண்டாடக்கூடிய விழாக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறிவைத்து பாஜக நடத்தும் தாக்குதலின் ஒரு பகுதியே இது என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter