குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முதல் தொடர் முழக்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிரை ஜாவியா சாலையில் நடைபெற்று வரும் இந்த தொடர் முழக்க போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.