டெல்லி சாகீன்பாக் பகுதியில் இரசாயன குண்டு வீசிய நபரை போலிசார் தேடிவருகின்றனர்.
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை சாகீன்பாக் பகுதியில் கட்டமைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கையில் வைத்திருந்த அடையாளடம் தெரியாத இரசாயன பொட்டலத்தை தூக்கி எரிந்துள்ளனர்.
இந்த பொட்டலம் சுவற்றில் மோதி கீழே விழுந்து எரிந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், பாதுகாப்பு காவலர்கள் தப்பி ஒடிய இருவரையும் அப்பகுதியின் CCTV பதிவுகளை வைத்து தீவிரமாக தேடி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.