298
தமிழ்நாடு அணி உட்பட 12 மாநிலப் பெயர்களை கொண்ட அணிகள் பங்கேற்ற புரோ கபடி போட்டி கடந்த மூன்று மாதங்களாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றது.அந்த தொடர் போட்டியின் இறுதி போட்டி சென்னையில் பலத்த எதிர்பார்ப்புடன் பாட்னா மற்றும் குஜராத் அணிகள் மோதின.ஆட்டம் ஆரம்பத்திலிருந்தே கடுமையான போட்டியாகவே இரு அணிக்கும் இருந்தது.பாட்னாவின் நட்சத்திர ஆட்டக்காரரும், டுபுகி கிங் என்றழைக்கப்படும் பரதிப் நர்வாலின் அசாத்திய ரைடுகளால் இறுதியில் நிலைகுலைந்து போனது குஜராத்.இறுதியில் 55-38 என்ற புள்ளிகளுடன் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.