மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்க கோரி புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழக அரசு தொடுத்த வழக்கில், மருத்துவ கல்லூரியில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும். இது குறித்து 3 மாத காலத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளன,. இதனை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை என குற்றம் சாட்டினார்.
இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
அதில், மத்திய அரசு இதுகுறித்து எந்த கொள்கை முடிவும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் ஏற்கனவே நடைமுறையில்உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை கோரினாலும் தர முடியாது என கூறியுள்ளது.
பெண்களுக்காக வக்காலத்து வாங்கும் பாஜக, பெண்களை துன்புறுத்தும் ஒருவரை மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமித்திருப்பது வெட்க கேடனாது. அந்த நியமன ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நடத்திய போராட்டங்கள் இந்து மதத்தை புண்படுத்திவிட்டார்கள் என்று எனக்கு எதிராக மட்டுமல்ல, நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். ஆனால், யாருடைய உரிமைக்காவும், இடஒதுக்கீட்டுக்கும், பெண்களின் நலனுக்காகவும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை.
எச்.ராஜா போன்றவர்கள் டிவிட்டர் பக்கத்தில் அநாகரீகமாக விமர்சனங்களை செய்யக் கூடிய அளவுக்கு தமிழகம் அவர்களை அனுமதித்து கொண்டிருக்கிறது. அவர்கள் தமிழகத்தை வன்முறை காடாக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு முழு பொறுப்பு அதிமுக அரசு தான் என்றார் திருமாவளவன்.