201
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அதி தீவிர புயலாக நேற்று அதிகாலை கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன.
இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி அதிராம்பட்டினத்தில் 64.2 மிமீ, மதுக்கூரில் 14 மிமீ, பட்டுக்கோட்டையில் 36 மிமீ மழை பெய்துள்ளது.