Home » தவக்களையும்,உதய நிதியும்!

தவக்களையும்,உதய நிதியும்!

by
0 comment

ஏமாற்றத்தில் உடன்பிறப்புக்கள்

முந்தானை முடிச்சு படம் வெளியான நேரத்தில் அந்த படத்தில் நடித்திருந்த தவக்களை என்ற நடிகரின் நடிப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தவக்களையை பல ஊர்களுக்கும் அழைத்து சென்று, முந்தானை முடிச்சு படத்தை பிரபலப்படுத்தினார்கள் தவக்களையை வேடிக்கை பார்க்க எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.

அந்த வகையில்அதிரைக்கும் தவக்களை வந்திருந்தார். அவரைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்போது ஒன்று கூடினார்கள்.
ஆனால் பொதுமக்கள் தவக்களையை வேடிக்கை பார்த்தார்கள் ஆனால் நடிகரோ கூடி நின்ற ரசிகர்களை அவர் மதிக்க வில்லை. என்ற குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.

அதேப்போல உதயநிதி ஸ்டாலினை வேடிக்கை பார்க்க எல்லா ஊரிலும் பொதுமக்கள் கூடுகிறார்கள். அவ்வரே அதிரையிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. எப்படியாவது அவரை சந்தித்தே ஆக வேண்டும் என முனைப்புடன் அவர் தங்கி இருந்த விட்டை கையில் சால்வையுடன் வட்டமடித்தனர் உபிக்கள்!

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு விழித்த விடியலின் நாயகன், காலை 11 மணிக்கு மல்லிப்பட்டினம், பேராவூரனி மக்களை சந்திக்க(?) கிளம்பினார்.

இது காத்திருந்த உடன் பிறப்புக்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

உதயநிதியின் தீவிர ரசிகர் ஒருவர், அரசியலில் கலைஞரின் நாகரிகம் கூட இல்லாத அவரது பேரன் அரசியலில் வெளிச்சம் பெற வேண்டும் என கையில் வைத்திருந்த சால்வையுடன் திரும்பிச்சென்றார்.

குறைந்த பட்சம் தாம் வந்திருந்த டெம்போ ட்ராவலர் வண்டியின் கூறை திறப்பானில் இருந்து தொண்டர்களுக்கு கையசைத்து சென்றிருக்க வேண்டும். என மூத்த உபிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter