222
உடல் உறுப்பு தானம் செய்வதில், நம் நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. நேற்று மத்திய அரசு சார்பாக நடை பெற்ற விழாவில் மனித உறுப்புகள் தானம் (Organ Donation) செய்வதில் நமது தமிழ் நாடு முதலிடத்தை பெற்று மத்திய அரசின் விருதை பெற்றது. மருத்துவத்துறையிலும் சரி, அதற்கான ஆக்க பணிகளிலும், மனிதாபிமான சேவை போன்ற விஷயங்களிலும் நம் தமிழ் மாநிலம் நாட்டுக்கே உதாரணமாக திகழ்கிறது என்பதில், தமிழர்களாகிய நமக்கு பெருமையே. வாழ்க தமிழகம். வளர்க தமிழ் புகழ்.