நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கா. அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தமாகா, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகளில் திமுக கூட்டணி பட்டுக்கோட்டை தொகுதியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. இருப்பினும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் திமுகவினர் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை ஆய்வு செய்யும் நோக்கில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் இன்று அதிரைக்கு வருகை தந்தார். அப்போது ஏனாதி பாலசுப்பிரமணியன், எம்எம்எஸ் குடும்பத்தினரை சந்தித்து களநிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் எம்எம்எஸ் குடும்பத்தினருக்கு திமுக உறுப்பினர் அட்டையும் வழங்கினார். இச்சந்திப்பின்போது திமுக பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் உள்ளிட்ட திமுகழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.




