அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தள ஊழியர்களாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தக்வா பள்ளி, பெரிய ஜும்ஆ பள்ளி தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி, கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி, மரைக்காயர் பள்ளி என மையவாடிகள் உள்ள பள்ளிவாசல்கள் இணைந்து மூவருக்கு தலா ₹9 ஆயிரம் வீதம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து துக்கன் என்ற தொழிலாளி கூறுகையில், இங்கு சொற்ப சம்பளமே கிடைக்கிறது. இது எங்களின் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. ஆதலால் எங்களுக்கு ரமலான் காலங்களில் தனவந்தர்கள் மூலமாக கிடைக்கும் ஜக்காத், சதகா, ஹதியா இவைகளை கொண்டு திருப்தியடைந்து கொள்கிறோம்.
எனவே இவ்வருட ரமலானிலும் தாங்கள் உங்களின் ஜக்காத், சதக்கா, ஹதியா இவைகளை எங்களுக்கும் வழங்கி உதவிட வேண்டும் எனவும், அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிரப்பமான பரக்கத்தையும் தந்தருள வேண்டுகிறோம் எனவும் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
+917549520145 / 8800843644 / 7061992324.
