150
அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கடந்த காலங்களில் கிராம ஒற்றுமையை கருத்தில் கொண்டு கிராம பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கும் நபரேதான் வார்டு கவுன்சிலராக இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில் முதன் முதலாக அப்பகுதி மக்கள் பொது தேர்தலை சந்திக்கின்றனர்.
அந்த வகையில் இந்த முறை தேர்தலில் முதன்முறையாக சுயேட்சை சின்னத்தில் நாகா என்கிற நாகராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
கிராம பஞ்சாயத்தார்கள் ஏகோபித்த முடிவின்படி கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.