97
அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராம மக்கள் தங்களின் வார்டு கடந்த 40 ஆண்டுகளாக சுழற்சி முறையில் தனி வார்டாக மாற்றவில்லை என்று இன்று இரண்டாவது நாளாக ஜனாநாயக முறையில் அமைதிவழி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இது குறித்து அரசு அதிகாரிகள் எந்த ஒரு சரியான பதில் அளிக்காத நிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய மக்களும் கலந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்