அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்ட் சார்பில் செயல்பட்டு வரும் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆண்டு தோறும் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காதிர்முகைதின் கல்லூரி கலையரங்கில் இந்த மாபெரும் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகர சேர்மன் துணை சேர்மன் என பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் அனைத்து துறை அலுவலர்கள் பத்திரிக்கை துறையினர்,காவல் துறை அதிகாரிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் என கலந்து கொண்டனர்.
முன்னதாக விருந்தினர்களை பள்ளியின் செயளாலர் முகம்மது மீராசாகிப் வரவேற்றார்.
இதில் மார்க்க அறிஞர் முகம்மது ஜிஸ்தி நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
விருந்தினர்களை வரவேற்று கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் சிறப்பாக உபசரிப்பு செய்திருந்தனர்.

