Monday, May 13, 2024

ட்ரிப்யூனல் நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த காலதாமதம் ஏன்? தஞ்சை வக்பு வாரியத்திற்கு அதிரை துலுக்கா பள்ளி முஹல்லாவாசிகள் கேள்வி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிக்கு என அசையா சொத்துக்கள் ஏராளமாக உள்ளது அதனை ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்க ஏதுவாக பள்ளிக்கு பாத்தியப்பட்ட நில தஸ்தாவேஜுகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் இந்நாள் முன்னால் நிர்வாகம் சிறப்பாக செய்தன.

அதன் படி துலுக்க பள்ளி ட்ரஸ்ட்டுக்கு சொந்தமான நிலங்களை கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது அதன் நகல் கல்வெட்டாக பள்ளிக்குள் நிறுவப்பட்டு இருக்கிறது. இதற்கு ஆட்டோபனைகளும்,ஆதரவும் பெருகின.

இந்த ஆவணங்களின் பிரகாரம் தற்போதைய நிர்வாகம் நில உரிமை கோருபவர்களை தனித்தனியே சந்தித்து நிலைமையக் எடுத்துகூறி மீண்டும் பள்ளிீயிலேயே ஒப்படைக்க கோரிக்கை விடப்பட்டது. அதில் சிலர் முன்வந்து பல கோடி மதிப்புள்ள பள்ளியின் சொத்தை ஒப்படைத்துள்ளனர், இன்னும் சிலர் ஒப்படைக்க முன்வந்திருக்கிறார்கள்.

ஆனால் அதில் 5 கடையினர் மட்டும் பள்ளிக்கு செலுத்தவேண்டிய வாடகையை செலுத்தாமலும், நிலத்தை முழுமையாக உரிமை கோரியும் இருந்து வருகிறார்கள். இதுகுறித்து வக்பு நீதிமன்றம் (ட்ரிபுயுனல்)த்தில் வழக்கு தொடர்ந்தனர் அதன் தீர்ப்பு பள்ளிக்கு சாதகமாக வந்துள்ளது.

அந்த தீர்ப்பில் வக்பு வாரிய அதிகாரி சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டு பள்ளியின் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

அதன்படி முன்னாள் தஞ்சை வக்பு வாரிய கண்காணிப்பாளர் ஹைதர் அலி மிக துரிதமாக செயல்பட்டு நிலத்தை மீட்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்,இந்த நிலையில் அவர் கோவைக்கு மாற்றலாகி சென்று விட்டார், அவருக்கு பதிலாக தாரீக் என்பவர் நியமிக்கப்பட்டார் அவரிடம் துலுக்கா பள்ளி நிர்வாகம் கோர்ட் ஆர்டர் உள்ளிட்டவற்றை காட்டி நிலத்தை மீட்க நடவடிக்கைகளை எடுக்க கேட்டு கொண்டதாக தெரிகிறது.

ஆனால் வக்புவாரிய கண்காணிப்பாளர் தாரீக் இந்த நில மீட்பு விவகாரத்தில் மொளனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பள்ளியின் நிர்வாக கால அவகாசம் விரைவில் முடிய உள்ள நிலையில் பள்ளியின் முழு நிலத்தையும் மீட்க போராடி வருகிறார்கள்.

இதுகுறித்து முஹல்லாவாசியான இக்பால் கூறுகையில், வக்பு நில விவகாரத்தில் நிர்வாகம் ஆமை வேகத்தில் நகர்கிறது என்றும், கோர்ட் ஆர்டர் இருந்து அகற்ற முன்வராத அதிகாரியை கண்டித்து போராட்டம் ஏன் நடத்த கூடாது என தெரிவித்தார்… தற்போது அந்த நிலங்களில் வியாபாரம் செய்து வரபவர்கள் யாரும் மோசடி காரர்கள் அல்ல அந்த காலத்தில் சிலறால் ஏமாற்றப்பட்டு நிலத்தை கிரயம் கொடுத்து வாங்கியவர்கள் தான் என்றார்.

மேலும் எப்போது இது பள்ளிவாசலுக்கு என தீர்ப்பாகி விட்டதோ அதற்கான வாடகையை கொடுத்தும் வியாபாரத்தை தொடர தக்வா பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் அதே போல வாடகை காரர்களும் 5.10 ரூபாய் என்றில்லாமல் மாதாமாதம் பள்ளி நிர்ணயிக்கப்பட்ட வாடகை தொகையை நிலுவையின்றி செலுத்த தவற கூடாது என்றார்.

சிறப்பு செய்தியாளர் யூனுஸ்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...