தேங்காய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தென்னை விவசாயிகள் சொல்லென்னா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
பெற்றபிள்ளைகள் கஞ்சி ஊற்றவில்லை என்றாலும், தென்னம்பிள்ளை காப்பாற்றும் என பழமொழி எல்லாம் கஜா புயலுக்கு முன்னர் பலித்தது ஆனால் விலை வீழ்ச்சி, விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை உள்ளிடவற்றை அரசு பூர்த்தி செய்து தரவில்லை.
இதுகுறித்து பலமுறை உரிய அதிகாரிகளுக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேராவூரணி பகுதியில் தென்னை விவசாயம் செய்து வரும் அதிராம்பட்டினம் இர்ஃபான் உள்ளிட்ட.தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு போராடி வருகிறார்கள்.
