Friday, May 3, 2024

ஆளுநரின் தேநீர் விருந்து ரத்து! ரீசன் என்னவா இருக்கும்?

Share post:

Date:

- Advertisement -

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். முதல்வர் உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களுக்கும் இந்த தேநீர் விருந்தில் அழைப்பு விடுக்கப்படும். அவர்களும் அந்த விருந்தில் கலந்துகொள்வார்கள்.
அந்த வகையில், இன்று சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வருக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால், முதல்வரும், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்தனர்.

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் நான் கையெழுத்து போட மாட்டேன் என இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். அப்போதே அவருக்கு முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், நேற்று முன்தினம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகனை இழந்த சோகத்தில் அவரது தந்தையும் இன்று தற்கொலை செய்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இதுதொடர்பான அறிக்கையில் ஆளுநர் ரவியை “இரக்கமற்ற ஆளுநர்” என்றும் முதல்வர் கடுமையாக விமர்சித்தார். அதேபோல, திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இந்த சூழலில், தான் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை ரத்து செய்வதாக ஆளுநர் மாளிகை இன்று மாலை திடீரென அறிவித்தது. கனமழை காரணமாக இந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...