கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) செய்து வரும் தன்னலமற்ற இரத்த தான சேவைகள் மற்றும் ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் சேவைகளை அனைவரும் நன்கு அறிவீர்கள்
தங்களது சேவைகளை இன்னும் வீரியமாக செய்வதற்கு மாவட்ட மற்றும் நகர புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட CBD அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினராக மதுக்கூரை சார்ந்த H.இம்தியாஸ் அகமது அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிராம்பட்டினம் மற்றும் மதுக்கூர் கிளைக்கான புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இனி வரும் காலங்களில் தஞ்சை மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் இதர செயல்பாடுகளுக்கு CBD அமைப்பின் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு :
கிரசெண்ட் பிளட் டோனர்ஸ்,
தஞ்சை மாவட்டம்.
8883184888, 9500392301 ,9791418704, 8508191619.