308
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலுடன் வறண்ட வானிலை நிலவி வந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.30 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர்ச்சியாக நள்ளிரவு 1 மணிவரை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு முழுவதும் குளிர்ந்த நிலை காணப்பட்டது. அதிராம்பட்டினத்தில் நேற்று 5 செ.மீ மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்றும் இரவு சுமார் 7.30 மணிமுதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.