சமீபகாலமா நம்ம ஊர் கல்லூரி, பள்ளிக்கூடங்களைச் சுத்தி இருக்க பெட்டிக்கடைகளில் ‘கூல் லிப்’னு (Cool Lip)ஒரு பொருள் அமோகமா விற்பனை ஆகுது. மாணவர்களை குறி வைக்கும் ஒரு சில நபர்களும் இதனை பள்ளி கல்லூரிகளின் அருகே விற்பனை செய்கிறார்கள். சின்னச் சின்ன புகையிலை போதைப் பொருள் அடங்கின பொட்டலங்கள் இந்த பாக்கெட்டுக்குள்ள இருக்கும்.
12 பொட்டலங்கள் இருக்குற பாக்கெட் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுது.
இதை உதட்டுக்குள்ளேயோ அல்லது நாக்குக்கு அடியிலோ வச்சிக்கிட்டா போதை ஏறும். இதில் வாசனை கிடையாது, வாய் சிவக்காது, பக்கத்துல வந்தா கூட யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. இதனால ஆசிரியர்களுக்கு கூடத் தெரியாம பசங்க பல பேர் இதைப் பயன்படுத்துறாங்க. நிக்கோட்டின் கலந்த புகையிலை வஸ்துதான் இது. அதனால இதை ஒருதரம் பயன்படுத்தினவங்க விடவே முடியாத அளவுக்கு அடிமையாவாங்க!’’…
காவல்துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்