தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர அதிமுக துணை செயலாளர் தமீம். இவர் பல்வேறு சமூதாய நல பணிகளில் ஈடுபட்டுவந்தார். இந்த சூழலில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்ட தமீம், இன்று வஃபாத்தானார். அதிரை அல்-அமீன் பள்ளிவாசல் உருவாக காரணமாக இருந்துவர்களில் மிக முக்கியமானவர் தமீம். அர்டா நில மீட்பு உள்ளிட்ட போராட்டங்களிலும் இவர் களத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது. அன்னாரது நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்