Friday, May 3, 2024

அதிரையில் KAIFA மற்றும் DIYWA-வின் அடுத்த அதிரடி! கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியின் தொடக்க விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரையை கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) சார்பில் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு ஊரில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

நாளை வியாழக்கிழமை(29/02/2024) முதல் 7 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் நாளை வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் துவக்க விழாவில் அதிரையைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், கிராம பஞ்சாயத்தார்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பணிகளுக்கான முதல் நாள் செலவை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மீதம் இருக்கக்கூடிய நாட்களுக்கு ஆகக்கூடிய செலவினை அதிரையில் உள்ள ஜமாஅத்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், செல்வந்தர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கைஃபா அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிகழ்வு நடைபெறும் இடம் : கடற்கரை சாலை, ரயில்வே கேட் அருகில்

இங்ஙனம்,
அதிரை கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், கடற்கரைத்தெரு, அதிராம்பட்டினம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...