Tuesday, December 2, 2025

இலவச டாக்டைம்.. இலவச இண்டர்நெட்.. : செல்போன் நிறுவனங்கள் அதிரடி!!

spot_imgspot_imgspot_imgspot_img

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து ஒட்டு மொத்த மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதனால், வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி இதுவரை 364 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன.

அது மட்டுனின்றி கேரளாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை அடிப்படை உதவிகளை ஓவ்வொரு மாநிலமும் அரசின் மூலமாக செய்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் கேரளாவில் நிலவும் இயற்கை பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு தங்களது சேவையை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளனர்.

மேற்கண்ட செல்போன் நிறுவனங்கள் தங்களது பிரிப்பெய்டு சந்தாதாரர்களுக்கு ₹10 ல் இருந்து ₹30 வரைக்கும், ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இலவச டாக்டைமும் வழங்க உள்ளனர்.

கூடுதலாக டாக்டைம் தேவைபட்டால் கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அது போக மேலும் 1 ஜிபி இண்டர்நெட் டேட்டாவும் கேரள மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனால் கேரள மக்கள் தங்கள் உறவினர்களுக்கு தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள மிகவும் ஏதுவாக இருக்கும்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் கேரள மக்கள் தங்களுடைய மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்வதற்கும் இலவச போன் கால் செய்வதற்கும் திரிச்சூர் காலிகட், மலப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாக்குளம் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img