Tuesday, May 7, 2024

கஜாவின் கோரத்தாண்டவம்… 19 நாட்களுக்கு பின் மின்சாரத்தைக் கண்ட மல்லிப்பட்டினம் !

Share post:

Date:

- Advertisement -

ஒட்டு மொத்த டெல்டா மக்களும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அடுத்த வேளை தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவு இருக்காது என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். விடிந்தால் வீடு இருக்காது. கண் விழித்தால் மரம் இருக்காது என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்க முடியாதொன்றை நிகழ்த்துவதுதானே இயற்கையின் நியதி ?

ஆம் கஜா என்னும் புயல் கோரதாண்டவம் ஆடி ஒட்டு மொத்த டெல்டாவையும் புரட்டிபோட்டுவிட்டது. ஆளுயர வளர்ந்து நின்ற அத்துனை மரங்களும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீழ்ந்து கிடக்கின்றன. கஜாவால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தஞ்சை மாவட்ட கடலோர ஊர்களும் அடக்கம். அதிலும் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகள் வரலாறு காணாத அழிவை சந்தித்தன.

கஜாவால் மல்லிப்பட்டினத்தில் கடந்த மாதம் 15ம் தேதி சென்ற மின்சாரம் இன்று 4ம் தேதி தான் வந்துள்ளது. அதுவும் சில பகுதிகளுக்கு மட்டும். இன்னும் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படவில்லை. அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த பகுதிகளுக்கும் இன்னும் ஓரிரு தினங்களில் மின் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய தேவையான மின்சாரம் இன்றி மல்லிப்பட்டினம் மக்கள் 19 நாட்கள் வாழ்ந்துள்ளனர்.

காலங்கள் மாறினாலும் கஜா புயல் ஏற்படுத்திய வடு மக்கள் மனதில் என்றும் அழியாது !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...