Thursday, May 9, 2024

13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை அலெர்ட்.!

Share post:

Date:

- Advertisement -

மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில், சென்னை, கோவை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் நேற்று  திடீரென மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று நள்ளிரவும் மழை பெய்ததால் சென்னையில் இன்று காலை இதமான சூழல் நிலவுகிறது.
  • இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் ஓரிரு இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 13 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் இதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.   புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதுபோலவே மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
  • மேலும் கோவையில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் இதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • முன்னதாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...