Saturday, March 21, 2026

அதிமுக அரசே மீண்டும் ஒரு வரலாற்று பிழையை செய்திடாதே !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசு தொடர் ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்த எத்தனித்துள்ளது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செல்லும் என யாரோ எழுதிக்கொடுத்த தீர்ப்பை வாசித்துள்ளது நீதிமன்றம்.

இதனை அடுத்து TTV ஆதரவு MLAக்களாக உள்ள ரத்தின சபாபதி, கலைச்செல்வன் , பிரபு ஆகிய மூவரின் பதவியை பறித்து அரிப்பைத் தீர்த்துக்கொள்ள முனைகிறது.

மத்திய அரசின் கைப்பாவை என்ற அழுக்கை துடைக்க அதிமுக விரும்ப வில்லை போலும், ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை நான்கு சுவற்றிர்க்குள் உட்கார்ந்து தீர்ப்பாக வாசிப்பதில் அர்த்தம் இல்லை.

தகுதி நீக்க நடவடிக்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களின் தொகுதிக்கு சென்று வாக்களித்த மக்களின் மன நிலையை அறிய நீதி மன்றம் குழு ஒன்றை நியமித்து அவர்களின் (MLA) செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு இருத்தல் வேண்டும்.

மக்களுக்கு தான் அரசே தவிர… அரசுக்காக மக்கள் இல்லை என்பதை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் வழிகாட்டல்கள் மூலம் மீண்டும் ஒரு தவறை (3 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிப்பு)செய்ய துடிக்கும் அதிமுக அரசு, அம்மா ஜெயலலிதாவால் வாய்ப்பு அளிக்கப்பட்ட மூன்று MLA மீது தவறான நடவடிக்கைகள் மூலமாக பதவி பறிப்பு என்ற அராஜாக போக்கு கட்டவிழ்த்து விடப்படுமானால் நிலைமை மோசமாகும், ஜனநாயகம் சிதைந்து போகும்.

மூச்சுக்கு முன்னூறு முறை அம்மாவின் அரசு என கூறி வரும் நீங்கள் இனி ஒரு வரலாற்று பிழையை செய்ய வேண்டாம்.

அதிரை கலிஃபா.
ஒருங்கிணைப்பாளர், அதிரை எக்ஸ்பிரஸ்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும்...
spot_imgspot_imgspot_imgspot_img