Monday, March 23, 2026

தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி, துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் பிரவீன்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவை காதலித்து கடந்த ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சரண்யாவை, ஆணவக்கொலை செய்ய சிலர் துடிப்பதாகக் கூறி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும், தங்களை பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வழங்ககோரியும் காதல் தம்பதி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இவர்கள், துப்பாக்கி கேட்டு மனு அளித்திருப்பது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img