Saturday, March 21, 2026

அதிரையில் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் இன்று சுமார் 11.30 மணியளவில் (ECR) கடற்கரை சாலை ரயில்வே கேட் அருகே ஒருவர் மயங்கி விழுந்து மரணமடந்துள்ளார்.

இராமநாதபுரத்தை சார்ந்த 55 வயது மதிக்கத்தக்க சிந்து முஹம்மது. இவர் மரைக்காவலசையில் திருமணம் செய்து வசித்து வருகிறார்.

தனது குடும்பத் தேவைகளுக்காக வீடுகளுக்குத் தேவையான பொருட்களை அதிரை போன்ற சுற்றியுள்ள ஊர்களுக்கு வியாபாரம் செய்து வந்த இவர், இன்று வழக்கம் போல் வியாபரத்திற்கு அதிரை நோக்கி சைக்கிளில் வந்த நிலையில்,(ECR) சாலை ரயில்வே கேட் அருகே வந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழ விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர், அவ்வழியே சென்றோர் அனைவரும் உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அஹமது ஹாஜா, கமால், மற்ற தமுமும நிர்வாகிகள் இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் கூறி அவர்களை வரவழைத்து தக்வா பள்ளியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img