NRC,CAA,NPR உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து நாம் மனிதர் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் வருகின்ற 10 ஆம் தேதியன்று பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கண்டன பொதுகூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தவ்ஃபீக் தலைமை ஏற்கிறார், இக்கண்டன பொது கூட்டத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் P ஜெய்னுல் ஆபீதீன்,தெஹ்லான் பாக்கவி,உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த கண்டன பொது கூட்டத்திற்கு திரளாக வந்து ஆதரவு தெரிவிக்குமாறு நாம் மனிதர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சரபுதீன் தெரிவித்து உள்ளார்.
