65
கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் குமரியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் தொடங்கிய சாரல் மழை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கன மழையாக மாறியது. அப்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். கோடை கால வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அரை மணி நேரம் பெய்ந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.